Home Photo News இனிதே நடந்து முடிந்த சவுந்தர்யா, விசாகன் திருமணம்!

இனிதே நடந்து முடிந்த சவுந்தர்யா, விசாகன் திருமணம்!

1544
0
SHARE
Ad

சென்னை: எம்ஆர்சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர தங்கும் விடுதியில் சவுந்தர்யா, விசாகன் திருமணம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. குடும்பத்தினர், நண்பர்கள், அரசியல் தலைவர்கள் இத்திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். இத்திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து இன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்,  நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், முன்னாள் மத்திய அமைச்சர் மு.. அழகிரி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் இத்திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதற்கிடையே, நேற்று போயஸ் இல்லத்தில் சவுந்தர்யா வீட்டு முறைப்படி திருமணம் நடந்து முடிந்த வேளையில், இன்று விசாகன் வீட்டு முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது எனக் கூறப்படுகிறது. இத்திருமண நிகழ்ச்சியின் புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:

#TamilSchoolmychoice