சென்னை: சோழ அரசின் ஆட்சிக்காலம், பரம்பரை, வீரம், காதல் மற்றும் நகைச்சுவைக் கலந்த படைப்பாக ‘பொன்னியின் செல்வன்’ காவியம் குறிப்பிடப்படுகிறது. இந்த நாவலை இணையத் தொடராக தயாரித்து வழங்க உள்ளதாக சவுந்தர்யா ரஜினிகாந்த் நேற்று (புதன்கிழமை) தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எம்.எக்ஸ். பிளேயர் நிறுவனமும், சவுந்தர்யா ரஜினிகாந்தின் மே 6 எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து, இந்த நாவலை இணையத் தொடராக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
இது அவருடைய கனவு திட்டமென்றும், இவ்விசயத்தை வெளிப்படுத்துவதில் அளவற்ற மகிழ்ச்சி பெறுவதாகவும் சவுந்தர்யா குறிப்பிட்டிருந்தார்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இத்தொடரின் அறிவிப்புக் காட்சியைக் காணலாம்: