Home நாடு 60 விழுக்காடு மலாய் சமூகத்தினர் நம்பிக்கைக் கூட்டணி அரசு மீது அதிருப்தி!

60 விழுக்காடு மலாய் சமூகத்தினர் நம்பிக்கைக் கூட்டணி அரசு மீது அதிருப்தி!

1608
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இல்ஹாம் செண்டர் மற்றும் பினேங் இன்ஸ்டிடியூட் இணைந்து நடத்திய கருத்து கணிப்பொன்றில், 60 விழுக்காடு மலாய் சமூகத்தினர் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் செயல்திறன் மீது அதிருப்தி கொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றது.

இந்தக் கருத்துக் கணிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 24-ஆம் தேதி வரையிலும், சுமார் 2,614 பேர்களால் பங்கெடுக்கப்பட்டது.

குறிப்பாக, மலாய் சமூகத்தினரின் விவகாரங்களை செயல்படுத்துவதிலும், மலாய்க்காரர்களின் உரிமைகள் மற்றும் இஸ்லாமிய மதத்தை அதிகாரப்பூர்வ மதமாகக் காப்பாற்றுவது உட்பட்ட விவகாரங்களில், அரசாங்கம் தீவிரமாக இல்லாத போக்கு நிலவுவதாக 54.4 விழுக்காட்டினர் கருத்து பதிந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

60 விழுக்காட்டு மக்கள், இந்நாட்டினை முஸ்லிம் அல்லாதோர் அரசாங்கத்தை ஆண்டுவருவதாகவும், புத்ராஜெயாவில் ஐசெக கட்சியினரின் முடிவுதான் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.