Home நாடு 16-வது மாமன்னராக சுல்தான் அப்துல்லா பதவி ஏற்றார்!

16-வது மாமன்னராக சுல்தான் அப்துல்லா பதவி ஏற்றார்!

1595
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் 16-வது மாமன்னராக பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா இன்று (வியாழக்கிழமை) இஸ்தானா நெகாராவில் பதவி ஏற்றார்.

இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில், துணை மாமன்னராக சுல்தான் நஸ்ரின் ஷாவும் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

ஜனவரி 24-ஆம் தேதி நடைபெற்ற, 251- வது சிறப்பு மலாய் ஆட்சியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் சுல்தான் அப்துல்லாவை மாமன்னராகத் தேர்ந்தெடுக்கும் முடிவு எடுக்கப்பட்டது. 

#TamilSchoolmychoice

உலகில் உள்ள 43 நாடுகளில், மலேசியாவும் அரசியலமைப்பு முடியாட்சி அமைப்பு முறையைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒன்பது மலாய் ஆட்சியாளர்களிடையே சுழற்சி முறையைப் பின்பற்றும் ஒரே நாடாகவும் மலேசியா விளங்குகிறது.

நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பெர்லிஸ், திரெங்கானு, கெடா, ஜோகூர் ஆட்சியாளர்கள் முன்னிலையில் மாமன்னரும், துணை மாமன்னரும் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கிளந்தானைப் பிரதிநிதித்து, தெங்கு மக்கோத்தா கிளந்தான் பங்கேற்றார். மேலும், பினாங்கு, சபா, மலாக்கா, மற்றும் சரவாக் மாநில ஆளுநர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.