அமெரிக்கா: இந்தியாவில் இந்து தேசிய கொள்கைகளைப் பெருமளவில் பாஜகவினர் வலியுறுத்தினால், பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அந்நாட்டில் பெரிய அளவில் இனக்கலவரங்கள் ஏற்படலாம் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும், புலனாய்வுத் துறைத் தலைவருமான டான் கோட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
டான் கோட்ஸ்சின் ஆய்வறிக்கையின்படி இஸ்லாமியர்கள் மீதான இந்து சக்திகளின் தாக்குதலால் இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். வருகிற பொதுத் தேர்தலுக்குள் தனது இந்து சார்பு அரசின் ஆட்சிக்காலம் முடிவடைவதால், பாஜக கட்சி கூடுமான வரையில் அனைத்து இந்து சம்பந்தப்பட்ட விவகாரங்களை தீவிரப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலைத் தொடர்ந்தால் தேர்தல் நடப்பதற்குள் நாட்டில் பெருமளவில் இனக்கலவரங்கள் ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டார். இதனைக் கருத்தில் கொண்டு நடப்பு அரசு அண்டை நாடான பாகிஸ்தானுடன் உறவை தற்போதைக்குப் பாராட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.