Home இந்தியா இந்தியா: மகாத்மா காந்தியின் 71-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது!

இந்தியா: மகாத்மா காந்தியின் 71-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது!

1893
0
SHARE
Ad

புது டெல்லி: இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் பாடுப்பட்ட இலட்சக்கணக்கான இந்தியர்களை அமைதியின் வழியில் ஒன்றிணைத்த தலைவர் என்ற பெருமையைக் கொண்ட மகாத்மா காந்தியின் 71-வது நினைவு நாள் நேற்று (புதன்கிழமை) அனைத்துத் தலைவர்கள் மற்றும் மக்களாலும் அனுசரிக்கப்பட்டது.

டெல்லி ராஜ்காட்டில் அமைந்திருக்கும் காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தங்களின் அஞ்சலியைச் செலுத்தினர்.

#TamilSchoolmychoice

இந்நாளை பொதுவாகவே தியாகிகள் தினம் எனக் கொண்டாடப்பட்டு வந்த நிலையில்,  தமிழகத்தில், சென்னை மெரினாவில் அமைந்திருக்கும் காந்தியின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நாதுராம் கோட்சே எனும் ஆடவரால், மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.