கோலாலம்பூர்: நடந்து முடிந்த கேமரன் மலை இடைத் தேர்தலில், 23 தேர்தல் குற்றச் செயல்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவே அதிகமானது எனவும் கூறப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கு, தேர்தல் ஆணையத்திற்கு அபராதங்களை விதிக்கும் உரிமையை ஏற்படுத்த வேண்டும் என பெர்செ அமைப்புக் கேட்டுக் கொண்டது.
இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அதன் தலைவர் தோமஸ் பான், இம்மாதிரியான குற்றங்களை அடையாளம் காணும் பொறுப்பை பெர்செ அமைப்புக்கு கொடுக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தார்.
1954- ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்தை மாற்றி அமைப்பதன் மூலம், இச்செயல்முறை சாத்தியப்படும் என அவர் கூறினார்.
தேர்தல் நடப்பதற்கு முன்பதாக, தேர்தல் சட்டங்கள்,விதிகளை அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்களுக்கு தெளிவுப்படுத்துவது அவசியம் என்றும் அவர் கூறினார்.
இவ்வாறு செய்வதன் மூலம் தேர்தல் குற்றங்களை ஓரளவிற்கு குறைக்கலாம் என தோமஸ் நம்பிக்கைத் தெரிவித்தார்.