Home இந்தியா சல்மான்கான் தீர்ப்பை வைத்து ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் – மும்பை போலீசார் விசாரணை!

சல்மான்கான் தீர்ப்பை வைத்து ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் – மும்பை போலீசார் விசாரணை!

604
0
SHARE
Ad

salman khanமும்பை, மே 7 – போதையில் காரை ஓட்டிச் சென்று ஒருவர் மீது ஏற்றி கொலை செய்த வழக்கில் பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கு நேற்று மும்பை நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இது இந்தி திரை உலகில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

2 நாட்கள் தற்காலிக ஜாமீன் பெற்றுள்ள நடிகர் சல்மான்கான் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட உள்ளார். இந்த நிலையில் நடிகர் சல்மான்கான் மீதான வழக்கில் நீதிபதி தீர்ப்பு கூறப்போகிறார் என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அது தொடர்பான சூதாட்டம் நடந்தது.

சல்மான்கான் விடுதலை ஆவாரா? மாட்டாரா? என்று இணையத்தளம் மூலம் இந்த சூதாட்டம் நடந்தது. நிறைய பேர் சல்மான்கான் விடுதலை ஆக மாட்டார் என்று அதிக பணம் கட்டினார்கள். நேற்று காலை ஒரு ரூபாய் கட்டினால் கூடுதலாக 28 பைசா கிடைக்கும் என்ற ரீதியில் சூதாட்டம் நடந்தது.

#TamilSchoolmychoice

நேற்று மதியம் அந்த சூதாட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது. ஒரு ரூபாய் கட்டினால் 10 ரூபாய் கிடைக்கும் என்ற ரீதியில் சூதாட்டம் பரபரப்பாக நடந்தது. இதுபற்றி மும்பை உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘சல்மான்கான் விடுதலை ஆவாரா என்பதை வைத்து உலகம் முழுவதும் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு சூதாட்டம் நடந்துள்ளது. மும்பையை விட மற்ற நகரங்களில்தான் இந்த சூதாட்டம் அதிகமாக நடந்துள்ளது’’ என்றார்.

மும்பை போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் நடித்து வரும் சினிமா படங்கள் காரணமாக மும்பை திரையுலகில் ரூ.200 கோடி முடக்கம் ஏற்பட்டுள்ளது.