Home One Line P2 பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘டபாங் 3’ – முன்னோட்டம் வெளியீடு

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘டபாங் 3’ – முன்னோட்டம் வெளியீடு

1130
0
SHARE
Ad

மும்பை – நடனக் குழுவில் கதாநாயகனுக்குப் பின்னால் கும்பலாக ஆடும் நடனக் கலைஞராகத் திரையுலகில் கால்பதித்து, தந்தை சுந்தரத்திற்கு நடன அமைப்பு உதவியாளராகவும், பின்னர் தனித்த நடன அமைப்பாளராகவும் பரிணமிக்கத் தொடங்கிய பிரபுதேவா, நாளடைவில் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்தார்.

அதே வேளையில் தமிழ், இந்தி என பல படங்களை இயக்கவும் செய்தார். அவை வெற்றிப் படங்களாகவும் அமைந்தன.

சல்மான் கான் பட வரிசையில் வசூலை வாரிக் குவித்த படங்கள் “டபாங் 1” மற்றும் “டபாங் 2” ஆகியவையாகும். சுல்புல் என்ற ரவுடி போலீசாக வந்து சல்மான் கலக்கிய இந்தப் படங்களின் வரிசையில் தற்போது மூன்றாவது படமாக ‘டபாங் 3’ எதிர்வரும் டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்தப் படத்தின் முன்னோட்டம் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டு ஒரே நாளில் 13 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

ஏற்கனவே, சல்மான் கான் நடித்த ‘வாண்டட்’ என்ற படத்தை இயக்கிய பிரபுதேவா, டபாங் 3 படத்தையும் இயக்கியிருக்கிறார். இரண்டு கதாநாயகிகள் பிரபுதேவாவுடன் இணையும் இந்தப் படத்தில் வில்லனாக சுதீப் கலக்குகிறார். ‘நான் ஈ’ படத்தில் ஈயுடன் போராட்டம் நடத்தும் வில்லனாக வந்த சுதீப் அதன் பிறகு பல படங்களில் நடித்திருக்கிறார்.

டபாங் 3 படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: