Home இந்தியா விக்கிரவாண்டியில் 43,175 – நாங்குநேரியில் 17,767 – பெரும்பான்மையில் அதிமுக முன்னிலை

விக்கிரவாண்டியில் 43,175 – நாங்குநேரியில் 17,767 – பெரும்பான்மையில் அதிமுக முன்னிலை

705
0
SHARE
Ad
முத்தமிழ்ச் செல்வன் (விக்கிரவாண்டி) – நாராயணன் (நாங்குநேரி)

விக்கிரவாண்டி

சென்னை: (மலேசிய நேரம் பிற்பகல் 3.45 நிலவரம்): கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அதிமுகவின் முத்தமிழ்ச் செல்வன் 109,359 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

திமுகவின் வேட்பாளர் புகழேந்தி 66,184 வாக்குகள் பெற்றுள்ளார்.

#TamilSchoolmychoice

எனவே, 43,175 வாக்குகள் பெரும்பான்மையில் அதிமுக  வெற்றி பெற்றிருக்கிறது.

நாம் தமிழர் கட்சி 2,826 வாக்குகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இறுதிநிலவரத் தகவல்களின்படி விக்கிரவாண்டியில் அதிமுகவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாங்குநேரி

நாங்குநேரியில் 59,507 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் நாராயணன் முன்னணி வகிக்கின்றார்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் இங்கு போட்டியிட்ட ரூபி மனோகரன் 41,740 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

தற்போதைய நிலவரப்படி நாங்குநேரியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் நாராயணன் 17,767 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி 1,704 வாக்குகள் பெற்றிருக்கிறது.

(மேலும் விவரங்கள் தொடரும்)