Home One Line P2 விக்கிரவாண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொவிட்-19 தொற்று

விக்கிரவாண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொவிட்-19 தொற்று

607
0
SHARE
Ad

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்ச்செல்வனுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்தாண்டு அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தலில் 44,903 வாக்குகள் பெரும்பான்மையில் அதிமுக வேட்பாளராக முத்தமிழ்ச் செல்வன் வெற்றி பெற்றார்.

அதில் முத்தமிழ்ச் செல்வன் (அதிமுக) 113,766 வாக்குகளும், புகழேந்தி (திமுக) 68,842 வாக்குகளும் பெற்றிருந்தார். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கந்தசாமி 2,921 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.