பெய்ஜிங்: சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்து ஏற்கெனவே 10 இலட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்றை எதிர்க்க உலகம் முழுவதும் சுமார் 150 தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், அமெரிக்காவை சேர்ந்த மாடெர்னா, பைசர் நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகள் இறுதிகட்ட சோதனையில் வெற்றியும் பெற்றுள்ளன.
“அவசர பயன்பாட்டுக்காக ஏற்கெனவே சுமார் 10 இலட்சம் பேருக்கு தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவருக்கு கூட எந்த சிக்கலும் ஏற்படவில்லை. சிலருக்கு இலேசான அறிகுறிகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன,” என்று சீன அரசுக்கு சொந்தமான மருந்து நிறுவனமான சீனோபார்ம் தலைவர் லியு ஜிங்ஷென் கூறியுள்ளார்.
“ஆராய்ச்சியில் தொடங்கி சோதனை, உற்பத்தி, அவசர பயன்பாடு வரை உலகிலேயே நாங்கள்தான் முன்னிலையில் இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.