Home One Line P1 ரோனி லியு கட்சி ஒழுக்காற்று குழு முன்னிலையில் நிறுத்தப்படுவார்!”- ஜசெக

ரோனி லியு கட்சி ஒழுக்காற்று குழு முன்னிலையில் நிறுத்தப்படுவார்!”- ஜசெக

683
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சி இல்லாத ஓர் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்று ஜசெகவின் மத்திய குழு உறுப்பினர் ரோனி லியு அழைப்பு விடுத்ததை அடுத்து, அவர், அக்கட்சியின் ஒழுக்காற்றுக் குழு முன்னிலையில் அவரது கூற்று குறித்து விளக்கம் அளிக்க பரிந்துரைத்துள்ளதாக ஜசெக தேசிய அமைப்பு செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

ஒரு வேளை, மகாதீர் நம்பிக்கைக் கூட்டணியை உடைக்க முற்பட்டால், ஜசெக, பிகேஆர், அமானா, வாரிசன் மற்றும் உப்கோ ஆகியோரைக் கொண்ட மீதமுள்ள கட்சிகள் பெர்சாத்து இல்லாமல் அரசாங்கத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று ரோனி லியு பரிந்துரைத்திருந்தார்.

ரோனி லியு வெளியிட்ட அறிக்கை அவரது தனிப்பட்ட பார்வை. இது ஒரு பொறுப்பற்ற அறிக்கை மற்றும் ஜசெகவின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்தாதுஎன்று நேற்று புதன்கிழமை லோக் செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

ரோனி லியுவின் இந்த அறிக்கையை நாசவேலைச் செயலாகக் கருதலாம், இது மிகவும் தீவிரமான ஒன்று. கூட்டணியின் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கும் நாசவேலையாக நான் கருதுகிறேன்.” என்று அவர் குறிப்பிட்டார்.

ஹாராப்பான் என்பது பெர்சாத்து, அமானா, பிகேஆர் மற்றும் ஜசெக ஆகிய நான்கு கட்சிகளின் கூட்டணியாகும். டாக்டர் மகாதீரின் தலைமையில் இந்த கூட்டணிக்கு அரசாங்கத்தை உருவாக்க மக்களால் எங்களுக்கு ஆணை வழங்கப்பட்டது.”

ஹாராப்பானைக் கேள்வி கேட்க எந்த ஜசெக தலைவரும் முன்வரக்கூடாது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், லியுவின் அறிக்கை அவரது தனிப்பட்ட பார்வை மட்டுமே என்று கூறினார். லியுவின் அந்த கருத்துக்கு பிறகு பெர்சாத்து கட்சித் தலைவர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன.