Home உலகம் பாலி 9 வழக்கு: கடைசி நேர பேச்சு வார்த்தையில் நடந்தது என்ன ? – டோனி...

பாலி 9 வழக்கு: கடைசி நேர பேச்சு வார்த்தையில் நடந்தது என்ன ? – டோனி அபாட் விளக்கம்

734
0
SHARE
Ad

மெல்பர்ன், மே 7 – ‘பாலி 9’ வழக்கில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி, இரு ஆஸ்திரேலிய பிரஜைகளான மயூரன் சுகுமாறன் மற்றும் ஆண்ட்ரியூ சானுக்கு இந்தோனேசிய அரசு மரண தண்டனை நிறைவேற்றியது மிகக் கொடூரமானது மற்றும் தேவையில்லாத ஒன்று என்று ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட் வானொலி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Tony abot

(படம்: டோனி அபாட் டிவிட்டர் )

#TamilSchoolmychoice

இன்று காலை மெல்பர்னில் உள்ள ரேடியோ 3ஏடபிள்யூ (Radio 3AW) என்ற வானொலிக்கு பேட்டியளித்த டோனி அபாட், வானொலி அறிவிப்பாளர் நெயில் மிட்சலின் கேள்விகளுக்கு இது குறித்து பதிலளித்துள்ளார்.

அந்த பேட்டி பின்வருமாறு:-

நெயில் மிட்செல்:

கொல்லப்பட்ட இருவரின் இறுதிச்சடங்குகள் விரைவில் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் அதற்கு அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். அது உங்களுக்கு சரியாகப் படுகின்றதா?

டோனி அபாட்:

குடும்பத்தினர்கள் என்னவெல்லாம் செய்ய நினைக்கிறார்களோ செய்யட்டும். நான் அந்த மரண தண்டனையை மிகக் கொடூரமானதாகவும், தேவையில்லாததாகவும் கருதுவதால் அதை கண்டிக்கின்றேன். அதே நேரத்தில், அவர்கள் செய்த போதைப் பொருள் விற்பனை குற்றத்தையும் கண்டிக்கின்றேன்.

நெயில் மிட்செல்:

இந்தோனேசியப் பிரதமர் மீண்டும் உங்களைத் தொடர்பு கொண்டாரா?

டோனி அபாட்:

மரண தண்டனை நிறைவேற்றுவது மிக உறுதியான போது, நான் அவரைத் தொடர்பு கொண்டு பேசினேன். அதற்குப் பிறகு அவருடன் பேச முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. அதற்கு பிறகு என்னை அவர் தொடர்பு கொண்டார். அந்த பேச்சு வார்த்தையில் மரண தண்டனையைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேசவில்லை. அந்த பேச்சுவார்த்தை சுமூகமாகவும், கண்ணியமாகவும் நடைபெற்றது. ஆனால் இறுதியில்..

நெயில் மிட்செல்:

அந்த பேச்சுவார்த்தை மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு எவ்வளவு நாளுக்கு முன்னர் நடைபெற்றது?

டோனி அபாட்:

சரியான தேதி நினைவில் இல்லை நெயில். ஆனால் அந்த பேச்சுவார்த்தை மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு சில வாரங்களுக்கு முன்னால் நடைபெற்றது.

இவ்வாறு டோனி அபாட் அந்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.

தொகுப்பு – ஃபீனிக்ஸ்தாசன்