Home அவசியம் படிக்க வேண்டியவை பாலி நைன் வரிசையில் பிரிட்டிஷ் பெண்மணி – கருணை மனு நிராகரிப்பு!

பாலி நைன் வரிசையில் பிரிட்டிஷ் பெண்மணி – கருணை மனு நிராகரிப்பு!

595
0
SHARE
Ad

britishஜகார்தா, மே 4 – பாலி நைன் குற்றவாளிகளைத் தொடர்ந்து பிரிட்டனைச் சேர்ந்த லிண்ட்சே சாண்டிஃபோர்ட் (58) என்ற பெண்மணிக்கும் மரண தண்டனை நிறைவேற்ற இந்தோனேசிய அரசு தயாராகி வருகிறது.

இது தொடர்பாக லிண்ட்சே தனது குடும்பத்தாருக்கு எழுதி உள்ள இறுதிக் கடிதங்கள் குறித்தும், அவரது தண்டனைக் காலம் குறித்தும் பிரிட்டிஷ் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும், லிண்ட்சே பிரிட்டிஷ் ஊடகங்களுக்கு எழுதி உள்ள கடிதமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“பாலி நைன் வரிசையில் எனக்கும் எந்நேரத்திலும் தண்டனை நிறைவேற்றப்படலாம். நான் எனது குடும்பத்தாருக்கு இறுதிக் கடிதங்களை எழுதத் தொடங்கி விட்டேன். பாலி நைன் வழக்கில் கொல்லப்பட்ட ஆஸ்திரேலியர்களான ஆண்ட்ரு சானும், மயூரனும் சிறையில் எனக்கு நெருங்கிய நண்பர்களானார்கள். ஆண்ட்ரு சான் நான் பெரியதாக மதிக்கும் மனிதர்களில் ஒருவர். அவர்களின் மறைவு மிகுந்த வேதனை தருகிறது.”

#TamilSchoolmychoice

“அதேபோல், எனது இரண்டு வயது பேத்தியை பார்க்க முடியாமல் இருப்பது வலி மிகுந்ததாக உள்ளது”என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு தாய்லாந்திலிருந்து, பாலி  திரும்பிய லிண்ட்சே, 1.6 மில்லியன் யூரோக்கள் மதிப்புடைய போதைப்பொருள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார். அவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம், கடந்த 2013-ம் ஆண்டு மரண தண்டனை வழங்க உத்தரவிட்டது.  இவருடைய கருணை மனுவையும் அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.