Home இந்தியா மான்வேட்டை வழக்கு: ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் சல்மான் கான்!

மான்வேட்டை வழக்கு: ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் சல்மான் கான்!

1152
0
SHARE
Ad

மும்பை – மான் வேட்டை வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் சல்மான் கான், இன்று திங்கட்கிழமை ஜோத்பூர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜரானார்.

மும்பையிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விமானத்தில் வந்திறங்கிய சல்மான் கான், இன்று திங்கட்கிழமை ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடைபெறும் தனது மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

#TamilSchoolmychoice