Home தேர்தல்-14 தந்தையின் கல்லறைக்கு மரியாதை செலுத்த வந்த மகாதீரை நிக் அசிஸ் மகன்கள் தடுத்தனர்!

தந்தையின் கல்லறைக்கு மரியாதை செலுத்த வந்த மகாதீரை நிக் அசிஸ் மகன்கள் தடுத்தனர்!

1328
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை பாஸ் சமயத் தலைவர்களில் ஒருவரான மறைந்த நிக் அப்துல் அசிஸ் நிக் மாட்டின் கல்லறைக்கு மரியாதை செலுத்த வந்த பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவை, நிக் அப்துல் அசிசின் மகன்கள் தடுத்து நிறுத்தினர்.

இது குறித்து நிக் அப்துல் அசிசின் மகன் நிக் அட்லி கூறுகையில், “அவர் எனது தந்தையின் கல்லறைக்கு மரியாதை செலுத்த வேண்டுமானால், பொதுத்தேர்தலுக்குப் பின்னர் வரட்டும்.

“(தற்போதைக்கு) அவர் கல்லறைக்கு வருவதில் (அரசியல் உள்நோக்கம்) ஏதோ இருக்கிறது. தேர்தலுக்குப் பின்னர் வாருங்கள், வெற்றியோ அல்லது தோல்வியோ” என்று நிக் அட்லி கூறியிருப்பதாக மலேசியாகினி தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

மகாதீர் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில், தீவிரவாதத்தில் ஈடுபட்டதாக நிக் அட்லி மீது எழுந்த குற்றச்சாட்டு காரணமாக அவர் ஐஎஸ்ஏ (உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில்) கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நிக் அசிசின் இரண்டாவது மகனான நிக் ஓமார், தற்போது பக்காத்தான் ஹராப்பான் ஆதரவாளராக செம்பாக்கா சட்டமன்றத்தில் போட்டியிடுவதால், அவரும் நேற்று மகாதீருடன் அங்கு வந்திருந்தார்.

இந்நிலையில், கிளந்தான் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் ஹூசாம் மூசா இது குறித்து வெளியிட்டிருக்கும் தகவலில், தேவையற்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க நிக் அசிசின் கல்லறைக்கு செல்லும் திட்டத்தை மகாதீர் ஒத்தி வைத்துவிட்டார் என்றும், கிளந்தானில் வழக்கமான தேர்தல் பிரச்சாரங்களில் மகாதீர் ஈடுபடுவார் என்றும் தெரிவித்திருக்கிறார்.