Home தேர்தல்-14 சிகாமட் 265 பெல்டா குடியிருப்பாளர்களுக்கு தலா 4000 ரிங்கிட் – டாக்டர் சுப்ரா அறிவிப்பு!

சிகாமட் 265 பெல்டா குடியிருப்பாளர்களுக்கு தலா 4000 ரிங்கிட் – டாக்டர் சுப்ரா அறிவிப்பு!

1393
0
SHARE
Ad

சிகாமட் – சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பெல்டா பாலோங் திமோர் டூவா மற்றும் பெல்டா பாலோங் திமோர் தீகாவைச் சேர்ந்த 265 பெல்டா குடியிருப்பாளர்களுக்கு மீள்நடுகைக்கான ஊக்கதொகையாக தலா 4,000 ரிங்கிட் வழங்கப்படும் என அத்தொகுதியில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் ச.சுப்ரமணியம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்திருக்கிறார்.

கடந்த 4 ஆண்டுகளாக இதற்காகக் காத்திருந்த பெல்டா குடியிருப்பாளர்களுக்கு, அந்த ஊக்கத்தொகையை வழங்கும்படி பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அனுமதி வழங்கியிருப்பதாகவும் டாக்டர் சுப்ரா தெரிவித்திருக்கிறார்.

“இதற்கு பிரதமர் அனுமதி வழங்கிவிட்டார். நாளை முதல் பணப்பட்டுவாடா செய்யப்படும்” என நேற்று இரவு குகுசான் பாலோங் திமுர் பகுதியில் நடைபெற்ற பெல்டா கூட்டத்தில் டாக்டர் சுப்ரா தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மே 9-ம் தேதி, பொதுத்தேர்தலுக்குள் இந்தத் தொகை அனைத்தும் பட்டுவாடா செய்யப்பட்டுவிடும் என்றும் டாக்டர் சுப்ரா அறிவித்திருக்கிறார்.