Home தேர்தல்-14 சிங்கப்பூர் – மலேசியா காஸ்வே இணைப்பில் சாலைப் பராமரிப்பு தற்காலிக நிறுத்தம்!

சிங்கப்பூர் – மலேசியா காஸ்வே இணைப்பில் சாலைப் பராமரிப்பு தற்காலிக நிறுத்தம்!

1123
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – 14-வது பொதுத்தேர்தல் வரும் மே 9-ம் தேதி புதன்கிழமை நடைபெறவிருக்கும் நிலையில், ஜோகூர் – சிங்கப்பூர் இடையிலான காஸ்வே இணைப்பு மற்றும் இரண்டாவது இணைப்பான துவாசில் நடைபெற்று வந்த சாலைப் பராமரிப்புப் பணிகள், மே 5 முதல் மே 13-ம் தேதி வரையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக ப்ளஸ் எக்ஸ்பிரஸ்வேஸ் பெர்ஹாட் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

 

தேர்தலில் வாக்களிக்க சிங்கப்பூரில் இருந்து ஜோகூர் வரும் மலேசியர்களுக்குத் தாமதம் ஏற்படுத்துவதற்காக காஸ்வே இணைப்பில் சாலைப் பராமரிப்பு வேலைகள் நடைபெற்று வருவதாக அண்மையில் பேஸ்புக்கில் பரவிய தகவலையடுத்து, ப்ளஸ் எக்ஸ்பிரஸ்வேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், காஸ்வேயில் எப்போதுமே கடுமையான வாகன நெரிசல் ஏற்படுவதால், அங்கு அடிக்கடி சாலைப் பராமரிப்புப் பணிகள் நடப்பது வழக்கம் என்றும், என்றாலும் மே 9-ம் தேதி பொதுத்தேர்தல் அன்று சிங்கப்பூரில் இருந்து மலேசியர்கள் ஜோகூர் வருவதற்கு எந்த ஒரு தடையும் இருக்காது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அதேவேளையில், மே 13-க்குப் பிறகு தான் அடுத்தக்கட்ட சாலைப் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்திருக்கிறார்.