Home தேர்தல்-14 தேர்தலுக்குப் பிறகு தியான் சுவாவிற்கு வழி விட்டு ஒதுங்கிவிடுவாரா பிரபாகரன்?

தேர்தலுக்குப் பிறகு தியான் சுவாவிற்கு வழி விட்டு ஒதுங்கிவிடுவாரா பிரபாகரன்?

1175
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில், பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பிரபாகரன், தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், தியான் சுவாவிற்கு வழிவிடும் வகையில் பதவி விலகிவிடுவார் எனக் கூறப்படும் கருத்தை தியான் சுவா மறுத்திருக்கிறார்.

“அப்படியெல்லாம் இல்லை. நான் தொடர்ந்து எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்” என தியான் சுவா தெரிவித்திருக்கிறார்.

வழக்கு ஒன்றில் விதிக்கப்பட்ட 2,000 ரிங்கிட் அபராதம் காரணமாக தியான் சுவாவால் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், அத்தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பிரபாகரனை பிகேஆர் கட்சி அங்கீகரித்து அவருக்காகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தேர்தலில் பிரபாகரன் வெற்றி பெற்றால், தியான் சுவாவிற்கு வழி விடும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என்றும், இதனால் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் வாட்சாப்பில் தகவல் ஒன்று வலம் வருகின்றது.

அதற்குப் பதிலளித்த தியான் சுவா அதனை மறுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.