Home One Line P2 “நல்ல கதை அமைந்தால், தமிழ் திரைப்படத்தில் நடிக்க ஆசை!”- சல்மான் கான்

“நல்ல கதை அமைந்தால், தமிழ் திரைப்படத்தில் நடிக்க ஆசை!”- சல்மான் கான்

957
0
SHARE
Ad

சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் கடந்த திங்களன்று சென்னையில் ஊடகங்களுடன் உரையாடிய போது,வடக்கில் மக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன்  மற்றும் பிரபாஸ் போன்ற நடிகர்களைப் போற்றுகின்றனர். தொலைக்காட்சிகளில்  மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட தமிழ் திரைப்படங்களை அவர்கள் விரும்புகிறார்கள். தமிழ் பார்வையாளர்கள் என்னைடபாங் 3’ படம் மூலமாக ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்என்று தெரிவித்துள்ளார்.

டபாங் 3-இல் அவர்கள் எதிர்பார்க்கும் அனைத்து கூறுகளும் உள்ளன. ‘டபாங் 3’ குடும்ப உணர்வு, நகைச்சுவை, ஹீரோவை மகிமைப்படுத்தும் காட்சிகள் மற்றும் நடனங்கள் என்று பல அம்சங்கள் உள்ளனஎன்று சல்மான் கான் கூறினார்.

ஆரம்பத்தில் நான் தமிழ் வரிகளை சொந்தமாக மொழிப்பெயர்க்க முயற்சித்தேன். பிரபு தேவாவின் உதவியாளர் எனது எல்லா முயற்சிகளையும் சரி செய்தார். ஆனால், பின்னர், எனது தமிழ் உச்சரிப்பு சரியானதாக இல்லை என்பதால் பிரபு வெளியீட்டை நிராகரித்தார்என்று சல்மான் மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

சரியான கதை  வழங்கப்பட்டால், நான் இங்கே தமிழ் படம் செய்து இந்தியில் மொழிப்பெயர்க்க  விரும்புகிறேன். “ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.