கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் தொடர்பான ஆவணங்களில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் கையொப்பம் தொடர்பாக, மூத்த துணை அரசு தரப்பு வழக்கறிஞர் வி.சிதம்பரம் இன்று புதன்கிழமை குற்றம் சாட்டப்பட்ட நஜிப் ரசாக்கை விசாரித்தார்.
“ஆமாம் இல்லை” என்ற கேள்வி பதில் நேரத்தில், சிதம்பரத்தின் கேள்விகளை நேரடியாக பதிலளிக்க நஜிப் மறுத்ததை அடுத்து இருவருக்கும் இடையே, வாதிடும் போக்கு நிலவியது.
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் ஆவணங்களில் நஜிப் தனது கையொப்பத்தை மறுத்தது உட்பட சீதம்பரத்தின் கேள்விகளில் அடங்கும்.
எம்ஏசிசி கேட்டபோது இந்த விஷயத்தை உறுதிப்படுத்தியதாக சிதம்பரம் நஜிப்பிடம் கூறினார். எனினும், அதனை நஜிப் மறுத்தார்.
சிதம்பரம்: உங்களுக்கு ஒரு நகல் காட்டப்பட்டது (விசாரணையின் போது), அந்த கட்டத்தில் எந்த ஆட்சேபனையும் இல்லாமல் கையொப்பத்தை உறுதிப்படுத்தி உள்ளீர்கள்.
நஜிப்: அந்த கட்டத்தில்.
சிதம்பரம்: எனவே, நீதிமன்றத்தில் அமர்ந்து உங்கள் வழக்கறிஞரின் குறுக்கு விசாரணையை கேட்டபின், இது உங்கள் கையொப்பம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
நஜிப்: இல்லை. நான் இதனை ஏற்கவில்லை.