Home இந்தியா சென்னையில் நிலநடுக்கத்தால் பயந்து ஓடிய மக்கள் (காணொளியுடன்)!

சென்னையில் நிலநடுக்கத்தால் பயந்து ஓடிய மக்கள் (காணொளியுடன்)!

650
0
SHARE
Ad

DSC_4857சென்னை, மே 13 – நேப்பாளை தொடர்ந்து சென்னையிலும் நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நேபாளம், சீனா, இந்தோனேஷியா மற்றும் இந்தியாவின் டெல்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதன் காரணமாக வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி, பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், கேரளா, சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் உணரப்பட்டுள்ளது.

சென்னையில் பெசன்ட்நகர், சாந்தோம், கோடம்பாக்கம், நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

#TamilSchoolmychoice