Home உலகம் காட்மாண்டு: விமானியின் கவனமின்மையால் 51 உயிர்கள் பலி!

காட்மாண்டு: விமானியின் கவனமின்மையால் 51 உயிர்கள் பலி!

1719
0
SHARE
Ad

காட்மாண்டு: கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஏற்பட்ட யுஎஸ்பங்களா ஏர்லைன் விமானம் சம்பந்தப்பட்ட விபத்தில் 51 பேர் உயிர் இழந்தனர்.

இவ்விபத்து எதனால் ஏற்பட்டது என்ற விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது, அவ்விசாரணையின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விபத்திற்கான முக்கியக் காரணம் விமானி புகைப்பிடித்தது தான் என தெரியவந்துள்ளது. இந்த விமான நிறுவனமானது விமானத்தில் புகைப்பிடிக்க தடை விதித்துள்ள போதிலும், அதனை மீறி அவ்விமானத்தின் விமானி புகைப்பிடித்துள்ளார். அவ்விமானத்தில் இருந்த காக்பிட் வாய்ஸ் ரெக்காடர் (CVP) மூலம் அவர் புகைப்பிடித்தது தெரியவந்துள்ளது.

#TamilSchoolmychoice

நேப்பாளத்தின் திருப்புவான் விமான நிலையத்தில் இந்த விமானமானது தரையிறங்கும் போது  இவ்விபத்து ஏற்பட்டது. மேலும், விமானம் தரையிறங்கும் போது, விமானத்தின் உயரம் மற்றும் ஏனைய விவரங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும், அதனால் தான் இந்த விபத்து நிகழ்ந்தது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேற்கு திசையில் பலமான காற்று வீசும் போது, தெற்கு திசையில் விமானம் தரையிறங்கியதால் தரையில் மோதி, விமானம் விபத்துக்குள்ளானது.

விமானியின் கவனம் முழுக்க புகைப்பிடிப்பதில் இருந்ததால், விமானத்தை தரையிறக்குவதில் அவர் கவனம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. அந்த விமானத்தில் பயணம் செய்த 67 பேரில், 51 பேர் மரணமுற்றனர்.