Home நாடு “நேப்பாளி தொழிலாளர்கள் தருவிப்பதில் ஊழல்” – சாஹிட் விசாரணைக்குத் தயார்

“நேப்பாளி தொழிலாளர்கள் தருவிப்பதில் ஊழல்” – சாஹிட் விசாரணைக்குத் தயார்

1607
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேப்பாளி டைம்ஸ் எனப்படும் இணைய ஊடகம் அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் மலேசியாவுக்கு நேப்பாளி தொழிலாளர்களைத் தருவிப்பதில் இருநாட்டு அரசாங்க அதிகாரிகள், நிறுவனங்களுக்கு இடையில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது என குற்றம் சாட்டியிருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் ஏறத்தாழ 5 பில்லியன் மலேசிய ரிங்கிட் ஊழல் முன்னாள் துணைப் பிரதமர் உறவினர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டது என்றும் அந்தச் செய்தி குறிப்பிட்டது.

இதனைத் தொடர்ந்து அம்னோ தேசியத் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான அகமட் சாஹிட் ஹமிடி அந்தச் செய்தியை மறுத்துள்ளதோடு, அந்தச் செய்தியில் குறிப்பிட்டபடி பெயர் கொண்ட உறவினர்கள் யாரையும் தான் கொண்டிருக்கவில்லை என்றும் உடனடியாக விசாரணையைத் தொடக்குங்கள் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.