Home தொழில் நுட்பம் புதிய ஆண்டிராய்டு பதிப்பில் சாம்சுங்குடன் கை கோர்க்கும் கூகுள்!

புதிய ஆண்டிராய்டு பதிப்பில் சாம்சுங்குடன் கை கோர்க்கும் கூகுள்!

635
0
SHARE
Ad

knox

சான் பிரான்சிஸ்கோ, ஜூன் 27 – கூகுள் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் தனது எதிர்கால தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் விதமாக, அனைத்துலக மென்பொருள் மேம்பாட்டாளர்கள் மாநாட்டினை நடத்தி வருகின்றது. இந்த மாநாட்டில் கூகுள் , செல்பேசிகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய தனது ஆண்டிராய்டு இயங்குத்தளத்தின் புதிய பதிப்பில், பாதுகாப்பினை அதிகரிக்கும் நோக்கத்தோடு முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங்குடன் கைகோற்பதாக அறிவித்துள்ளது.

இந்த கூட்டு முயற்சியில் ஆண்டிராய்டு இயங்குத்தளத்தின் புதிய பதிப்புடன், சாம்சங் நிறுவனத்தின் ‘க்னாக்ஸ்’ (KNOX) தொழில்நுட்பமும் இணைகின்றது.

#TamilSchoolmychoice

க்னாக்ஸ் தொழில்நுட்பம்:

பயனர்களின் தனிப்பட்ட தகவல்களையும், அலுவலக ரீதியான தகவல்களையும் பாதுகாக்கும் பொருட்டு சாம்சங் அறிமுகப்படுத்திய இந்த தொழில்நுட்பம், மற்ற பாதுகாப்பு முறையை விட சிறந்ததாக இருக்கும்.   சாம்சங் கேலக்ஸி நோட் 3-ல் அறிமுகமான இந்த தொழில்நுட்பம், இனி வரும் அனைத்து சாம்சங் செல்பேசிகளிலும், புதிய ஆண்டிராய்டு இயங்குதளத்துடன் இணைந்தே மேம்படுத்தப்படும்.

இது குறித்து க்னாக்ஸ் பிரிவின் மூத்த துணைத் தலைவர் கூறுகையில், “கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஆண்டிராய்டு அமைப்பில் பணியாற்ற இருப்பது பெரும் ஆர்வத்தை அளிக்கின்றது” என்று கூறியுள்ளார்.