Home Featured தொழில் நுட்பம் அண்டிரொய்டை காப்பாற்ற கூகுளுடன் கைகோர்க்கும் சாம்சுங்!

அண்டிரொய்டை காப்பாற்ற கூகுளுடன் கைகோர்க்கும் சாம்சுங்!

584
0
SHARE
Ad

androidகோலாலம்பூர், ஆகஸ்ட் 8 –  ‘ஸ்டேஜ்ஃப்ரைட்’ (Stagefright) என்ற ஒற்றை ஆங்கில வார்த்தை கூகுள் நிறுவனத்தையே கலக்கம் அடைய வைத்திருக்கிறது. அண்டிரொய்டு திறன்பேசி வைத்திருக்கும் பயனர்கள், தெரியாதவர்களிடம் உங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுத்தால் போதும், ஒருவேளை எண்ணை வாங்கியவர் ஹேக்கராக இருந்தால், ஸ்டேஜ்ஃப்ரைட் என்ற இந்த புதிய ‘வழுவைக்’ (Bug) கொண்டு உங்களின் திறன்பேசியை மிக எளிதாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், ‘பார்ச்சூன்’ (Fortune) இதழில் இந்த வழு பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது. ஏறக்குறைய 95 சதவீத அண்டிரொய்டு திறன்பேசிகள் இந்த வழுவினால் பாதிக்கப்படும் என்று தொழில்நுட்ப வல்லுனர்களும் தெரிவித்து இருந்தனர். இதனால், கலக்கமடைந்துள்ள கூகுள், சாம்சுங் நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பு குறித்து புதிய திட்டம் ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

அதன்படி, கூகுள் மற்றும் சாம்சுங் நிறுவனங்கள் இணைந்து, ஒவ்வொரு மாதமும் பாதுகாப்பு திருத்தங்களை மேம்படுத்த முடிவு செய்துள்ளன. இதற்கு முன் கூகுள், இத்தகைய நடைமுறையை தனது நெக்சஸ் திறன்பேசிகளில் மட்டுமே மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.