Home இந்தியா மகன், மகளுக்கு ஆடம்பர திருமணம் மராட்டிய மந்திரி வீட்டில் வருமானவரி சோதனை

மகன், மகளுக்கு ஆடம்பர திருமணம் மராட்டிய மந்திரி வீட்டில் வருமானவரி சோதனை

470
0
SHARE
Ad

mumbaiமும்பை, பிப். 20- மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

தேசியவாத காங்கிரசை சேர்ந்த பாஸ்கர் ஜாதவ் மராட்டிய மந்திரி சபையில் நகர்புற வளர்ச்சி மற்றும் வனத்துறை மந்திரியாக பணிபுரிந்து வருகிறார்.

பாஸ்கர் ஜாதவ் தனது மகன் மற்றும் மகள் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்தினார்.

#TamilSchoolmychoice

இந்த திருமணத்துக்காக அவர் மொத்தம் ரூ.5 கோடி செலவழித்ததாக கூறப்படுகிறது. கட்டுமான நிறுவனமான ஷா நிறுவனம் இந்த திருமணத்துக்கு 60 ஆயிரம் பேருக்கான உணவை கொடுத்ததாகவும்  கூறப்படுகிறது.

அந்த நிறுவனம் மந்திரி பாஸ்கர் ஜாதவ் மூலம் லாபம் அடைந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த ஆடம்பரமான திருமணத்தை தேசிய வாத காங்கிரஸ் தலைவரும், மத்திய மந்திரியுமான சரத்பவார் வெளிப்படையாகவே விமர்சனம் செய்து இருந்தார்.

இந்த நிலையில் ஆடம்பர திருமணம் தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் மந்திரி பாஸ்கர் ஜாதவ் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினார்கள். மும்பை மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளிலும் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிபுலம் வீட்டில் 11 அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது மந்திரி பாஸ்கர் ஜாதவிடமும் 1 1/2 மணி நேரம் வருமானவரி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

இந்த ஆடம்பர திருமணம் தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். இந்த சோதனையின் போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல ஷா கட்டுமான நிறுவனத்திலும் அந்த நிறுவன உரிமையாளருக்கு சொந்தமான ஓட்டலிலும் சோதனை நடத்தப்பட்டது. வருமான வரித்துறையின் சோதனை மற்றும் விசாரணையால் மத்திய மந்திரி பாஸ்கர் ஜாதவ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்த சோதனையை நான் எதிர்பார்க்கவில்லை. எனது திருமணத்துக்க நீர்பாசன ஒப்பந்தக்காரர் பணம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. எந்த ஒப்பந்தக்காருடன் எனக்கு தொடர்பு இல்லை. தீவிர அரசியலில் இருந்து நான் விலக தயாராகவும் இருக்கிறேன். இந்த திருமணம் ஆடம்பரமாக நடந்தது என்பதை மறுக்கவில்லை. ஆனால் 15 ஆயிரம் பேர் தான் பங்கேற்றனர். இவ்வாறு பாஸ்கர் ஜாதவ் கூறியுள்ளார்.