புதுடில்லி, ஆகஸ்ட் 2 – ‘வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியில், வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகளில் உள்ள பிரச்சனைகளை புரிந்துகொள்ள வேண்டும்’ என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியிடம், பிரதமர் மோடி கண்டிப்புடன் கூறியதாக, மத்திய அரசு தரப்பில் கூறப்படுவதாவது:-
உலக வர்த்தக மையமான, டபிள்யூ.டி.ஓ.,வில் அங்கம் வகிக்கும் நாடுகளிடையே, விளைபொருள் வர்த்தகத்தை எளிமைப்படுத்தும் ஒப்பந்தம்,சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தினால், இந்தியாவில் உணவு பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படும். ஏராளமான மக்கள் வறுமையில் பாதிக்கப்படுவர்.
இதுபோன்ற விஷயங்களில், வளரும் நாடுகளின் பிரச்சனைகளை, அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கண்டிப்புடன் கூறியதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.