Home அவசியம் படிக்க வேண்டியவை திறன்பேசிகள் உற்பத்தியில் 5-ம் இடத்திற்கு முன்னேறிய சியாவுமி!

திறன்பேசிகள் உற்பத்தியில் 5-ம் இடத்திற்கு முன்னேறிய சியாவுமி!

488
0
SHARE
Ad

xiaomi-mi4கோலாலம்பூர், ஆகஸ்ட் 2 – மேற்கத்திய நாடுகள் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வந்த செல்பேசிகளின் தயாரிப்பில் சீனாவின் மூன்று முக்கிய நிறுவனங்கள் முன்னணியில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ‘சியாவுமி’ (Xiaomi) நிறுவனம், குறுகிய காலத்தில் செல்பேசிகளின் தயாரிப்பில் சிறப்பான இடத்தை தக்க வைத்துக் கொண்டு தொழில்நுட்ப உலகை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

சீனாவின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் சியாவுமி நிறுவனம், சீனாவில் மட்டும் அல்லாது மேற்கத்திய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்திய ஆசிய சந்தைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில், சியாவுமி நிறுவனம் இலாபக் கணக்கீட்டில் உலக அளவில் 5-ம் இடத்தைப் பிடித்துள்ளது. இது பற்றி வெளியாகி உள்ள புள்ளிவிவரங்கள் அடிப்படையில் கூறப்பட்டுள்ளதாவது:-

#TamilSchoolmychoice

சியாவுமி நிறுவனம் உலக அளவில் 15 மில்லியன் செல்பேசிகளை விற்பனை செய்துள்ளதால், இதன் வர்த்தக பங்கு  5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இரண்டாம் காலாண்டில் லெனோவாவிற்கு அடுத்த இடமான 5-ம் இடத்தினை சியாவுமி தக்க வைத்துக் கொண்டது.”

முதல் மூன்று இடங்களை முறையே சாம்சுங், ஆப்பிள் மற்றும் ஹவாய் நிறுவனங்கள் பெற்றுள்ளன. இதில் சாம்சுங் நிறுவனம், இரண்டாம் காலாண்டில் 74.5 மில்லியன் திறன்பேசிகளை ஏற்றுமதி செய்து உலக அளவில், 25 சதவீத பங்குகளைப் பெற்றுள்ளது. ஆப்பிள் நிறுவனம் 35.2 மில்லியன் திறன்பேசிகளையும், ஹவாய் 20.1 மில்லியன் திறன்பேசிகளையும் ஏற்றுமதி செய்து 13.4 மற்றும் 4.8 சதவீத பங்குகளை கொண்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில் சியாவுமி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட மூன்று வருடங்களில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது, முன்னணி நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் சாம்சுங்கிற்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.