Home தொழில் நுட்பம் சியோமி நிறுவனம் எம்ஐ4 திறன்பேசிகளை அறிமுகப்படுத்தியது!

சியோமி நிறுவனம் எம்ஐ4 திறன்பேசிகளை அறிமுகப்படுத்தியது!

526
0
SHARE
Ad

xiaomi-mi4பெய்ஜிங், ஜூலை 24 – சீனாவின் சியோமி நிறுவனம் தனது எதிர்பார்ப்புக்குரிய திறன்பேசியான எம்ஐ4′ (Mi4) –ஐ அறிமுகப்படுத்தியது.

சீனாவின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் சியோமி நிறுவனம், அந்நாட்டில் மிகப்பெரும் வர்த்தகத்தை செய்து வரும் ஆப்பிளுக்கு போட்டியாக அதிவிரைவாக வளர்ந்து வருகின்றது.

ஆப்பிள் திறன்பேசிகளில் உள்ள அத்தனை தொழில்நுட்பங்களையும் தங்கள் திறன்பேசிகளிலும் செயல்படுத்தி வருவதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அந்நிறுவனத்தின் திறன்பேசிகள் மீது பெரிய  எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றது.

#TamilSchoolmychoice

தற்போது அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள எம்ஐ 4 திறன்பேசியானது, உலகின் அதிவேக திறன்பேசியாக விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது.

பிக்செல் தீர்மானம், செயலிகளின் இயக்கம் உட்பட அனைத்திலும் அதிக கவனம் செலுத்தி இந்த திறன்பேசிகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எம்ஐ 4 திறன்பேசிகளின் சிறப்பு அம்சங்கள் :-

இந்த திறன்பேசிகள் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக குவாட் எச்டி‘ (Quad HD) உருவாக்காமல் முழு எச்டி தீர்மானத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திறன்பேசிகள் 3ஜிபி முதன்மை நினைவகமும், 13 மெகா பிக்செல் பின்புற கேமராவும் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது.”

மேலும், பிரபலமாகி வரும் செல்ஃபி தொழில்நுட்பத்திற்காக மெகா பிக்செல் கொண்ட முன்புற கேமராவும் அமைக்கப்பட்டுள்ளது.”  

16ஜிபி, 64 ஜிபி என்ற இருவேறு நினைவகங்களில் வெளிவந்துள்ள இந்த திறன்பேசிகளுக்கு முறையே 320 அமெரிக்க டாலர்கள், 400 அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது சீனாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற இந்த திறன்பேசிகள் விரைவில் ஆசியா முழுவதும் விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகின்றது.

ஆப்பிள் போன்ற செயல்திறனும், தொழில்நுட்பமும் இந்த திறன்பேசிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளதால் வர்த்தகத்தில் ஆப்பிளுக்கு கடும் போட்டியாக சியோமி இருக்கும் என வர்த்தக வல்லுனர்களால் கூறப்படுகின்றது.