Home கலை உலகம் கவிஞர் வைரமுத்துவிற்கு அறுவை சிகிச்சை! மருத்துவமனையில் அனுமதி!

கவிஞர் வைரமுத்துவிற்கு அறுவை சிகிச்சை! மருத்துவமனையில் அனுமதி!

702
0
SHARE
Ad

V.Vairamuthuகோவை, ஜூலை 24 – சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து முதுகுவலியால் அவதிப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரை கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது முதுகு தண்டு வடத்தில் எலும்பு தேய்மானம் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு முதுகு தண்டு வடத்தில் நுட்பமான அறுவை சிகிச்சை (மைக்ரோ சர்ஜரி) செய்யப்பட்டது.

vairamuthuஅறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் நலமுடன் உள்ளார் எனவும், இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

அன்மையில்தான் வைரமுத்து தனது பிறந்த நாளை, கவிஞர்கள் திருநாள், கலை இலக்கியத் திருவிழாவாக கோவையில் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.