இந்த நூலுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் மலேசியத் தமிழர்களின் சார்பில் கௌரவிப்பு நிகழ்ச்சி ஒன்று நாளை மார்ச் 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் புத்ரா உலக வாணிப மண்டபத்தில் மாலை 6.00 மணிக்கு நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு கவிஞர் வைரமுத்து நேரடியாக வருகை தந்து சிறப்பிக்கிறார். மலேசியத் தமிழ் காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து சிறந்த தமிழ் நூலுக்கான ‘பெருந்தமிழ்’ விருது வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்கு வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனும், மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.