Home நாடு பெர்சாத்துவின் 6 நாடாளுமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டால்…இந்தியர்கள் வாக்குகள் எந்தப் பக்கம்?

பெர்சாத்துவின் 6 நாடாளுமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டால்…இந்தியர்கள் வாக்குகள் எந்தப் பக்கம்?

372
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை (மார்ச் 2) நடைபெற்ற பெர்சாத்து கட்சியின் சிறப்பு பொதுப்பேரவையில் சில சட்டவிதித் திருத்தங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதன்படி அந்தக் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் இன்னொரு கட்சிக்கு ஆதரவு தந்தால், அவர் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்.

இதைத் தொடர்ந்து மலேசிய அரசியல் சாசனத்தின்படி நீக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரின் பதவி பறிக்கப்பட்டு, அவரின் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். இடைத் தேர்தல் நடத்தப்படும்.

இந்த சட்டவிதித் திருத்தங்கள் அடுத்த கட்டமாக சங்கப் பதிவிலாகவுக்கு அனுப்பி வைக்கப்படும். சங்கப் பதிவிலாகா ஏற்றுக் கொண்டாலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பதவி காலியாவதற்கு நாடாளுமன்ற அவைத் தலைவரும் சட்ட ரீதியாக ஒப்புக் கொள்ள வேண்டும்.

#TamilSchoolmychoice

சில சட்ட ரீதியான வழக்குகளும் நீதிமன்றத்தில் தொடரப்படலாம்.

எல்லாம் முடிந்து சர்ச்சைக்குரிய அந்த 6 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்பட்டால்….?

சர்ச்சைக்குரிய 6 பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுல்காப்பெரி ஹானாபி (தஞ்சோங் காராங்), சைட் அபு ஹூசின் ஹாபிஸ் சைட் அப்துல் ஃபாசால் (புக்கிட் கந்தாங்), இஸ்கண்டார் சுல்கர்னைன் அப்துல் காலிட் (கோலகங்சார்), முகமட் அசிசி அபு நைம் (குவா மூசாங்), சாஹாரி கெச்சிக் (ஜெலி), சுஹாய்லி அப்துல் ரஹ்மான் (லாபுவான்) ஆகியோராவர்.

இந்தத் தொகுதிகளில் குவாங் மூசாங் (கிளந்தான்), ஜெலி (கிளந்தான்) லாபுவான் (கூட்டரசுப் பிரதேசம், சபா) ஆகிய 3 தொகுதிகளில் குறிப்பிடத்தக்க இந்திய வாக்காளர்கள் இல்லை. ஆனால் மற்ற 3 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய அளவுக்கு கணிசமான இந்திய வாக்காளர்கள் உள்ளனர்.

தஞ்சோங் காராங் (சிலாங்கூர்) சுமார் 9 விழுக்காடு இந்திய வாக்குகளைக் கொண்டது. கோலகங்சாரில் 7 விழுக்காடும் புக்கிட் கந்தாங்கில் 8 விழுக்காடும் இந்திய வாக்காளர்கள் உள்ளனர். இந்த 3 தொகுதிகளையும் வெற்றி கொள்ள ஒற்றுமை அரசாங்கத்திற்கு இந்திய வாக்காளர்களின் ஆதரவு தேவை.

ஒற்றுமை அரசாங்கத்திற்கு எதிராக அதிருப்தி அலைகள் அதிகரித்திருக்கும் நிலையில் அவர்களின் வாக்குகள் இந்த 3 தொகுதிகளிலும் ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்களுக்கு கிடைக்குமா?