Home இந்தியா அதிமுகவுடன், தேமுதிக கூட்டணி உறுதியானது

அதிமுகவுடன், தேமுதிக கூட்டணி உறுதியானது

321
0
SHARE
Ad

சென்னை : இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் எந்தக் கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்ற ஆரூடங்கள் நிலவிய நிலையில் தேமுதிக அதனுடன் இணைவது உறுதியாகியுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 1) அதிமுக சார்பில் முன்னாள்  அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அதிமுக பொறுப்பாளர்கள் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

“மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளோம். இரு தரப்பிலும் குழு அமைக்கப்படும். குழு அமைக்கப்பட்ட பின்னர் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டது” என சந்தப்புக்குப் பின்னர் வேலுமணி கூறினார்.

#TamilSchoolmychoice

விஜய்காந்த் மறைவுக்குப் பிறகு தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் இது. விஜய்காந்த் மறைவினால் ஏற்பட்டிருக்கும் அனுதாபத்தால் இந்த முறை தேமுதிகவுக்கு ஆதரவு அதிகரிக்கலாம் என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது.