சுகாதாரமின்மை மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்றுதான் தொண்டையில் துவங்கி உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொண்டையில் புண் இருக்கும்போது தொண்டை கரகரப்பு மற்றும் அரிப்பு இருக்க வாய்ப்புள்ளது.
இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில நாட்களில் குணமாகி விடும். சுகாதாரமற்ற தண்ணீரை குடிக்கும்போது வைரஸ் தொற்றும், சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளும்போது பாக்டீரியா தொற்றும் உண்டாகிறது.
இதனால் எச்சில் விழுங்கும்போது வலி ஏற்படும். தொண்டையின் பின் சுவர் சிவந்து வெள்ளைப் புள்ளிகள் உருவாகும். மேலும் குளிர் காய்ச்சல் ஏற்படும். பெரும்பாலும் சளி, எச்சில் வழியாக இந்த நோய் மற்றவருக்கு எளிதில் பரவுகிறது.
இஞ்சி: தொண்டையில் உள்ள புண்ணிற்கு இஞ்சி மிகவும் சிறந்த ஒரு மருத்துவப்பொருளாகும். இஞ்சியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால், தொண்டையில் உள்ள கரகரப்பு சில நிமிடங்களில் சரியாகி விடுவதோடு, தொண்டை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
மிளகு: காரப்பொருட்களில் ஒன்றான மிளகை உணவுடன் சேர்த்தோ அல்லது அதை தூளாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் தொண்டையில் உள்ள கரகரப்பு மற்றும் புண் விரைவில் சரியாகிவிடும்.
எனவே இருமல் அல்லது சளி இருக்கும்போது மிளகு சாப்பிடுவது எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் தடுத்துவிடும்.
தொண்டையில் நோய் தொற்று இருக்கும்பட்சத்தில் இதமான சூட்டில் சுத்தமான திரவ உணவுகள் (தண்ணீர், சூப்) போன்றவைகளை குடிக்கலாம்.
மிதமான சூட்டில் தண்ணீர் எடுத்து அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து தொண்டையில் படும்படி கொப்பளிக்க வேண்டும். இது தொண்டைக்கு இதமளிப்பதுடன் சளி வெளியேறவும் உதவும்.