Home கலை உலகம் அஜீத்தின் ‘தல 55’ படம் பற்றி சில சுவையான தகவல்கள்!

அஜீத்தின் ‘தல 55’ படம் பற்றி சில சுவையான தகவல்கள்!

704
0
SHARE
Ad

ajithசென்னை, செப்டம்பர் 4 – அஜீத்தை வைத்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம் ‘தல 55’. இப்படம் தொடங்கியது முதல் அப்படத்தைப் பற்றிய தகவல்களை படு ரகசியமாக வைத்துள்ளார் கௌதம் மேனன்.

அதுமட்டுமல்லாமல், அப்படத்தின் புகைப்படங்களும் பத்திரிகைகளுக்கு வெளியாகாதபடி கடுமையான கட்டுப்பாட்டை கடைபிடித்து வருகின்றார் கௌதம் வாசுதேவ் மேனன்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன், இப்படத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி கௌதம் மேனனை அதிர்ச்சியடைய வைத்ததாம். தற்போது அஜீத் நடிக்கும் 55 படத்தைப் பற்றிய தகவல்களும் கசிய அரம்பித்துள்ளன.

#TamilSchoolmychoice

thala55005இப்படத்தில் அஜித் போலீஸாக நடிக்கிறாராம். அதே நேரம் படம் ஆரம்பித்து 45 நிமிடங்கள் வரை அஜித் யார் என்பது ரசிகர்களுக்கு தெரியாதாம். இப்படத்தில் அஜீத் 28 வயதிலிருந்து 35 வயது வரைக்குமான நான்கு தோற்றங்களில் வருகிறாராம்.

பொறியியலாளராக வேலைசெய்யும் 28 வயது பெண்ணாக அனுஷ்கா இப்படத்தில் நடித்திருக்கிறார். இன்னொரு நாயகியாக நடிக்கும் த்ரிஷா இப்படத்தில் யாரைக் காதலிருக்கிறார் என்பது படத்தில் மறைமுகமாக இருக்குமாம்.

thala55002மங்காத்தாவில் மோட்டார் சைக்கிள் சாகஸம், பில்லா 2 படத்தில் ஹெலிகாப்டர் சாகஸம், வீரம் படத்தின் ரயில் சண்டையைத் தொடர்ந்து இந்த படத்தில் 120 அடி உயர கட்டிடத்திலிருந்து கீழே இறங்கி வருவது போன்ற ஒரு காட்சியில் அஜீத் நடித்து படக்குழுவை பிரமிக்க வைத்திருக்கிறாராம்.

வட இந்தியாவின் ராணுவத்தளங்களின் சில இடங்களில் படப்பிடிப்பை நடத்துவதற்காக சிறப்பு அனுமதி வாங்கியிருக்கிறாராம் ஏ.எம்.ரத்னம். விரைவில் இந்த இடங்களில் படப்பிடிப்பு துவங்குமாம்.

thala55கௌதமுடன் மீண்டும் இணைந்திருக்கும் ஹாரிஸ் இப்படத்திற்காக 6 சிறப்பான பாடல்களை உருவாக்கியிருக்கிறார். ஜேம்ஸ்பான்ட் படங்களைப் போல, இப்படத்தில் அஜீத் செய்திருக்கும் கதாபாத்திரத்தை மையமாக வைத்தே தொடர்ந்து சில படங்களை இயக்க முடிவு செய்திருக்கிறாராம் கௌதம் மேனன்.

அந்த எல்லா படங்களிலும் அஜித்தே நாயகனாகத் தொடர்வாராம். இப்படத்தின் தலைப்பை தீபாவளி வரை ரகசியமாகவே வைத்திருக்க முடிவு செய்திருக்கிறார்களாம் பக்குழுவினர்.