பிஸ்தா பருப்பில் இனிப்புச் சுவையுடைய நறுமண எண்ணெய், காலோடானிக் எனும் அமிலம் ஆகியன காணப்படுகின்றன. இவை நரம்பு மணடலத்தை தூண்டி, ஆண்மை சக்தியை அதிகப்படுத்தி, புத்துணர்ச்சியை உண்டாக்குகின்றன.
குழந்தை பெற்ற பெண்கள் பிஸ்தா பருப்பை பாலுடன் வேகவைத்தோ அல்லது நெய்யில் பொரித்தோ சாப்பிட தாய்ப்பால் நன்கு சுரக்கும். ஆண், பெண் இருபாலரும் பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட்டால் நியாபகச் சக்தி அதிகரிக்கும்.
பிஸ்தா உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதோடு ஆரோக்கியம் தரக்கூடிய கொழுப்பை அதிகரிக்கச்செய்யும். பிஸ்தா சாப்பிடுவதால் நீரிழிவு நோயை கட்டுப்படும்.
வைட்டமின் பி6 ல் ஹீமோகுளோபின் என்ற அமிலம் அதிகப்படுத்தக்கூடிய தன்மையும், ஆக்ஸிஜனை ரத்தஓட்டம் வழியாக செல்களுக்கு கொண்டுசேர்க்கும் பொறுப்பு மற்றும் ஆக்ஸிஜனை அளவை அதிகரிக்கும் பணியை செய்கிறது.