Home இந்தியா ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக்கூடாது: விஜயகாந்த் வலியுறுத்தல்!

ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக்கூடாது: விஜயகாந்த் வலியுறுத்தல்!

531
0
SHARE
Ad

vijayakanth-jaya_110304சென்னை, அக்டோபர் 7 – சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு வரவேற்க்கத்தக்கது என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். பெங்களூரு சிறையில் உள்ள ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசினார்.

அப்போது அவர், ”சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றார். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்”.

#TamilSchoolmychoice

“ஆனால், இந்த போராட்டங்களை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஏன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. பெங்களூரு சிறையில் இருந்து ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக்கூடாது என்றும் கூறினார்.”

மேலும், “கிரானைட் உள்ளிட்ட முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்றம் ஏற்படுத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் குழுவை செயல்படுத்தவும் தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகால சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை தமிழகத்தில் உள்ள சிறைக்கு மாற்றவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்குத்தான் விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.