Home உலகம் பிரான்ஸ், இங்கிலாந்து 24ஆம் தேதிக்குள் எபோலா தாக்கத்தால் பாதிக்கப்படலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை

பிரான்ஸ், இங்கிலாந்து 24ஆம் தேதிக்குள் எபோலா தாக்கத்தால் பாதிக்கப்படலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை

585
0
SHARE
Ad

Hundred_years_war_france_england_1435லண்டன், அக்டோபர் 7 – தற்போதுள்ள நிலவரப்படி எபோலா கிருமித் தாக்கம் அக்டோபர் 24-ஆம் தேதிக்குள் பிரான்ஸ் நாட்டை எட்டிவிடும் என்றும், இதற்கு 75 விழுக்காடு வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதே தேதியில் இங்கிலாந்தை இந்த கிருமித் தொற்று எட்டிப்பிடிக்க 50 விழுக்காடு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அண்மைக்கால விமானப் போக்குவரத்து தகவல்களை அடிப்படையாக வைத்து இந்தக் கணிப்புகளை நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஒருவேளை எபோலா பாதிப்புள்ள பகுதிகளுக்கான விமானப் போக்குவரத்து 80 விழுக்காடு குறைந்தாலும் கூட பிரான்ஸை எபோலா கிருமி சென்றடைய 25 விழுக்காடு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. பிரிட்டனுக்கு 15 விழுக்காடு வாய்ப்புள்ளது.

#TamilSchoolmychoice

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய எபோலா பாதிப்பானது இதுவரை உலகம் முழுவதும் 3400 பேரை பலி கொண்டுள்ளது. மேலும் 7200 பேருக்கு தற்போது எபோலா பாதிப்பு உள்ளது.

நைஜீரியா, செனகல், அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு விமானங்களில் வந்திறங்கியவர்களில் பலரும் தங்களுக்கு எபோலா பாதிப்பு இருப்பதையே அறிந்திருக்கவில்லை.

கடந்த செவ்வாய்க்கிழமை லைபீரியாவில் இருந்து அமெரிக்கா வந்திறங்கியவருக்கு எபோலா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் வழி அமெரிக்காவிலும் எபோலா கால் பதித்துள்ளது.

எபோலா பாதிப்புள்ள கினியா, சியரா லியோன், லைபீரியா ஆகியவை பிரெஞ்சு மொழி ஆதிக்கமுள்ள பகுதிகளாகும். இந்நாடுகளுக்கும் பிரான்சுக்கும் இடையே ஏராளமான விமானச் சேவைகள் உள்ளன. இதன் காரணமாக அடுத்து பிரான்ஸ்தான் எபோலாவால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பாவின் மிக முக்கியமான விமானப் போக்குவரத்து மையமாக விளங்குவதால் இங்கிலாந்தையும் இந்த ஆபத்து நெருங்கி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

“எபோலா பாதித்த தங்கள் நாட்டவர்களில் தலா ஒருவரை அழைத்து வந்து உரிய சிகிச்சை அளித்து இவ்விரு நாடுகளும் குணப்படுத்தி உள்ளன. இந்நிலையில் எந்த நேரத்திலும் இவ்விரு நாடுகளிலும் எபோலா கிருமி நுழையக்கூடும்,” என்கிறார் இங்கிலாந்தின் லான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் கிருமித் தொற்று பிரிவு நிபுணரான டெரக் கேத்ரெரர்.

இதேபோல் எபோலா பாதிப்பு ஏற்பட பெல்ஜியத்திற்கு 40, ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்துக்கு 14 விழுக்காடு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

எபோலா பாதித்த பகுதிகளுக்கான விமானப் போக்குவரத்துக்கு உலக சுகாதார நிறுவனம் எத்தகைய கட்டுப்பாடும் விதிக்கவில்லை என்றாலும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனங்கள் சில விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன.