Home கலை உலகம் ஷாருக்கானின் ‘ஹேப்பி நியூ இயர்’ முதல் நாள் வசூல் ரூ.45 கோடி

ஷாருக்கானின் ‘ஹேப்பி நியூ இயர்’ முதல் நாள் வசூல் ரூ.45 கோடி

523
0
SHARE
Ad

Bollywood actors/cast members Shahrukh Khan (L) and Boman Irani speak during the presentation of their up-coming movie 'Happy New Year', in Mumbai, India, 14 August 2014.மும்பை, அக்டோபர் 27 – ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்துள்ள ‘ஹேப்பி நியூ இயர்’ இந்தித் திரைப்படம் முதல் நாளே சுமார் ரூ.45 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதுவரை  எந்தவொரு இந்தியப் படமும் இந்தளவு தொகையை முதல் நாள் வசூலாகக் கண்டதில்லை என்று கூறப்படுகிறது.

இப்படம் உலகம் முழுவதும் ஏறத்தாழ 4 ஆயிரம் திரையரங்குகளில் வெளியீடு கண்டுள்ளது. பிரபல நடன இயக்குநர் ஃபரா கான் இயக்கத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார் ஷாருக்கான். படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான்.

ஷாருக் ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ள இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.150 கோடியாகும். கடந்த அக்டோபர் 24ஆம் தேதி இந்தப் படம் வெளியீடு கண்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் ‘ஹேப்பி நியூ இயர்’ முதல் நாளன்று ரூ.44.97 கோடி வசூல் கண்டுள்ளதாக ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுவரை எந்த இந்தியப் படத்துக்கும் கிடைக்காத மிகப் பெரிய முதல் நாள் வசூல் இது.

இந்தியில் மட்டும் 42.62 கோடியைக் குவித்துள்ளது ‘ஹேப்பி நியூ இயர்’. தெலுங்கில் 1.43 கோடியும், தமிழில் 92 லட்சமும் வசூலாகியுள்ளது.

ஹிருத்திக் ரோஷனின் ‘பேங் பேங்’ படத்தைத் தொடர்ந்து ‘ஹேப்பி நியூ இயர்’ படமும் நேரடியாக தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு முன்னர் ஷாருக்கானின் காலில் அடிபட்டது. இப்போதோ அந்த வேதனை மறைந்து, வசூல் சாதனை மகிழ்ச்சியில் திளைக்கிறாராம் ஷாருக்.