Home உலகம் பெய்ஜிங்கில் ஜிங்பிங், ஷின்சோ அபே முதல் முறையாக சந்திப்பு!

பெய்ஜிங்கில் ஜிங்பிங், ஷின்சோ அபே முதல் முறையாக சந்திப்பு!

580
0
SHARE
Ad

abayபெய்ஜிங், நவம்பர் 11 – ஜப்பான் அதிபர் ஷின்சோ அபே மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இருவரும் நேற்று முதன் முறையாக அரசியல் ரீதியான சந்திப்பை மேற்கொண்டனர்.

பெய்ஜிங்கில் நடந்த இந்த சந்திப்பின் போது இரு நாட்டுத் தலைவர்களும் தங்கள் நாடுகளுக்கு இடையே நிலைவி வரும் எல்லை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் சுமூகத் தீர்வை எட்டுவதற்கான முடிவினை மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது.

ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு நேற்று சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கியது. ஆசிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பெய்ஜிங் வந்திருந்தார்.

#TamilSchoolmychoice

இந்த மாநாட்டின் போதே அவர் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.  இந்நிலையில் சீனாவின் மக்கள் அரங்கத்தில் நடந்த இந்த சந்திப்பில்,

இரு நாட்டு தலைவர்களும் தங்கள் நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் கிழக்கு சீன கடல் பகுதியின் எல்லை விவகாரம், தடைபட்டுப் போன வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒப்பந்தங்கள், அரசியல் ரீதியான தீர்வுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளையும் அதனை தீர்ப்பதற்கான நடைமுறைச் சிக்கல்களைப் பற்றியும் நீண்ட விவாதம் மேற்கொண்டனர்.

இதன் முடிவில், இரு நாடுகளும் இணைந்து அமைதி வழியில் முன்னேற்றம் காணவும், விழிப்பான இராணுவம் மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றுவது பற்றியும் சமரச உடன்படிக்கைகளை மேற்கொண்டனர்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையே நிரந்தர நட்புறவு நிலவுவதற்கு, முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் பொதுநோக்கு அவசியம் என்பதை இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இரு நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சனைகளுக்கு இவர்களின் சந்திப்பு முற்றுபுள்ளி வைக்கும் என உலகத் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.