Home நிகழ்வுகள் சிரம்பானில் சிறுகதை மற்றும் கவிதை பயிலரங்கம்

சிரம்பானில் சிறுகதை மற்றும் கவிதை பயிலரங்கம்

707
0
SHARE
Ad

n9சிரம்பான், பிப்.26- மலேசியத் தமிழ்ப் பாவலர் மன்றம், நெகிரி செம்பிலான் கிளையின் ஏற்பாட்டில் சிறுகதை, கவிதை பயிலரங்கம் 3, 2.3.2013 சனிக்கிழமை மாலை 2.00 மணி முதல் 5.00 மணி வரை சிரம்பான், ஜாலான் ஜாபாவிலுள்ள  நெகிரி செம்பிலான்  இந்தியர் சங்க கட்டட முதல் மாடியில், மன்றத்தின் தலைவர் பெ. கந்தசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.

முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இப்பயிலரங்கில், தமிழ் மொழி விளக்கம், சிறுகதை எழுதுவது, மரபு கவிதை எழுதும் பயிற்சி ஆகியன கற்றுத்தரப்படும்.

ஆகவே, தமிழ் எழுத்துத்துறையில் ஆர்வமுள்ள ஆண் பெண் இருபாலரும் வயது கட்டுபாடு இன்றி கலந்து பயன் பெறலாம்.

#TamilSchoolmychoice

தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், இடைநிலைப்பள்ளி மாணவர்கள், தமிழ் பற்றாளர்களர்கள் அனைவரும் இப்பயிலரங்கில் கலந்து கொள்ளலாம்.

மேல் விவரங்களுக்கு பயிலரங்க ஏற்பாட்டாளர் பெ.கந்தசாமி 012-3068090 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.