Home உலகம் “ஹாகுபிட்” புயல் பிலிப்பைன்சைத் தாக்கியது – 3 பேர் மரணம்!

“ஹாகுபிட்” புயல் பிலிப்பைன்சைத் தாக்கியது – 3 பேர் மரணம்!

625
0
SHARE
Ad

மணிலா, டிசம்பர் 8 -வானிலை ஆய்வுகள் கணித்தபடி ‘ஹாகுபிட்’ புயல் பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கியுள்ளது. கிழக்கு மற்றும் மத்திய பிலிப்பைன்ஸ் பகுதிகளில் தாக்கிய இந்த புயல் வீடுகளைச் சேதப்படுத்தி தரைமட்டமாக்கியதோடு, மின் சக்தி தொடர்புகளையும் துண்டித்துள்ளது.

 Filipino motorists make their way through fallen trees in the town of Taft after Typhoon Hagupit made landfall, in Borongan city, Samar island, Philippines, 07 December 2014. Typhoon Hagupit knocked out power and flattened houses as it pummelled the eastern and central Philippines overnight, leaving millions of people in darkness amid heavy rains and howling winds, officials said. At least three people were killed and two injured as powerful typhoon lashed the eastern and central Philippines.  EPA/FRANCIS R. MALASIG
போரோங்கான் நகரின் சாலைகளில் வீழ்ந்து கிடக்கும் மரங்களின் ஊடே பிலிப்பினோ மக்கள் மோட்டார் சைக்கிள்களில் தங்களின் பயணத்தைத் தொடர முயன்ற காட்சி

சுழன்றடித்த கடுமையான புயல் காற்று, மின் சக்தி துண்டிக்கப்பட்டதால் எங்கும் கவிழ்ந்த இருள், கனத்த மழை, இவற்றோடு இலட்சக்கணக்கான மக்கள் போராட வேண்டிய நெருக்கடியான நிலைமைக்குத் தள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், இந்த புயல் தாக்குதலினால் இதுவரை மூவர் மரணமடைந்துள்ளனர் என்பதோடு இருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

படம்: EPA