Home தொழில் நுட்பம் இனி வாட்ஸ் அப்பிற்கு ‘ரோமிங்’ இல்லை – வாட்சிம் அறிமுகம்!

இனி வாட்ஸ் அப்பிற்கு ‘ரோமிங்’ இல்லை – வாட்சிம் அறிமுகம்!

450
0
SHARE
Ad

WhatSimகோலாலம்பூர், ஜனவரி 24 – பல்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு ஊடகங்கள் உலகத்தை இணைத்து வந்துள்ளன. தற்போது, ‘வாட்ஸ் அப்’ (WhatsApp) காலம் நிலவுகிறது.

உலகத்தை ஒற்றை செல்பேசியில் அடக்கி உள்ள வாட்ஸ் அப், உலகம் முழுவதும் சுமார் 700 மில்லியன் பயனர்களை இணைத்துள்ளது.

ஆரம்பிக்கப்பட்டு மிகக் குறுகிய காலத்தில், பெரும் வரவேற்பை பெற்றுள்ள வாட்ஸ் அப்பிற்கு, கூடுதல் சிறப்பை ஏற்படுத்த இத்தாலிய நிறுவனம் ஒன்று புதிய வசதி ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. அதுதான் வாட்ஸ் அப் ‘சிம் அட்டைகள்’ (Sim Cards).

#TamilSchoolmychoice

‘ஜீரோமொபைல்’ (ZeroMobile) என்ற அந்த நிறுவனம், அறிமுகப்படுத்தி உள்ள இந்த சிம் அட்டைகள் மூலம் உலகின் 150 நாடுகளில் ரோமிங் கட்டணம் ஏதுமின்றி வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியும்.

இது தொடர்பாக ஜீரோமொபைல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மானுவேல் ஜனில்லா கூறுகையில், “அதிக பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப்பிற்கு தற்போது உள்ள தடை ஒன்று தான்”.

“வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் போது, நாம் பயன்படுத்தும் சிம் அட்டைகள் ‘ரோமிங்’ (Roaming) கட்டணத்தை அதிகரிக்கும். இதனைத் தவிர்க்க நாம், இலவச இணைய வசதி உள்ள இடங்களை தேட வேண்டி இருக்கும். இனி அந்த நிலை இருக்காது.”

“எங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள ‘வாட்சிம்’ (Whatsim) மூலம், 150 நாடுகளில் வாட்ஸ் அப்பை எல்லையின்றி பயன்படுத்தலாம்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த வாட்சிம்மின் விலை 10 யூரோ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இணைய வர்த்தகத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வரும் வாட்சிம், விரைவில் உலக நாடுகளின் சந்தைகளுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.