Home Featured தொழில் நுட்பம் வெகு விரைவில் வாட்சாப்பிலும் ‘வீடியோ கால்’ வசதி!

வெகு விரைவில் வாட்சாப்பிலும் ‘வீடியோ கால்’ வசதி!

690
0
SHARE
Ad

whatsapp-video-afd-010415கோலாலம்பூர் – உலகம் முழுவதும் மிகப் பிரபலமாக இருக்கும் வாட்சாப், தனது தளத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முனைந்துள்ளது. குறுந்தகவல் அனுப்புவதற்கும், பல்லூடக தரவுகளை அனுப்புவதற்கும் பயன்படுத்தப்பட்ட வந்த வாட்சாப், எப்போது தொலைபேசி அழைப்புகளை கொண்டு வந்ததோ, அப்போது முதல் நட்பு ஊடகங்களில் உச்சத்தைத் தொட்டுவிட்டது.

தற்போது மற்றொரு நிகரற்ற சேவையான ‘காணொளி அழைப்புகள்’ (Video Calling) வசதியினையும் மேம்படுத்த முயற்சித்து வருகிறது. ஏறக்குறைய இதற்கான செயல்பாடுகள் அனைத்தும் முடிந்து, மேம்பாட்டிற்குக் காத்திருப்பதாகவே தெரிய வருகிறது. சமீபத்தில் பிரபல ஜெர்மானிய தொழில்நுட்ப தகவல்களை வெளியிடும் பிளாக்கர் ஒருவர், ஐஓஎஸ் தளத்திற்கான வாட்சாப்பில், வீடியோ கால் வசதி மேம்படுத்தப்பட்டு இருக்கும் ‘திரைப்பிடிப்பை’ (Screen Shots) வெளியிட்டு வாட்சாப் பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.

50295144இந்த வசதியை மேம்படுத்துவதற்காக வாட்சாப், ஸ்கைப் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது வெளியாகி இருக்கும் ஸ்க்ரீன்ஷாட்களில் வாட்சாப்பின் பச்சை நிறம் மேலாதிக்கமாக இருக்கிறது. முன்புற கேமரா, பின்புற கேமராவை ஃப்ளிப் செய்து கொள்ளும் வசதி, ஸ்கைப் கால் போன்று, பேசுபவர் மற்றும் கேட்பவருக்கான திரை என பல்வேறு அம்சங்களை வாட்சாப் மேம்படுத்த இருப்பதாக, அந்த பிளாக்கர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அடுத்த சில வாரங்களிலோ, மாதங்களிலோ வாட்சாப்பிடமிருந்து இந்த வாசதி தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம். அதுவரை பொறுமைகாக்க வேண்டியது தான்.