Home Featured தொழில் நுட்பம் வாட்சாப்பில் நடு விரல் எமொஜி – ஏற்றுக் கொள்ளத்தக்கதா?

வாட்சாப்பில் நடு விரல் எமொஜி – ஏற்றுக் கொள்ளத்தக்கதா?

796
0
SHARE
Ad

whatsapp1கோலாலம்பூர் – உலக அளவில் வாட்சாப் பயனர்கள் அதிகரித்து வரும் நிலையில், மேலும் மேலும் பயனர்களைக் கவர்வதற்காக அந்நிறுவனம், புதிய புதிய யோசனைகளின் அடிப்படையில் பல்வேறு மேம்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் அண்டிரொய்டு தளத்திற்கான, வாட்சாப்பின் புதிய பதிப்பு பல்வேறு சிறப்பான வசதிகளை கொண்டிருந்தாலும், சில அதிர்ச்சிகரமான எமொஜிக்களையும் (Emoji) மேம்படுத்தி உள்ளது.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்த படி, இனப் பாகுபாட்டை அப்பட்டமாக குறிப்பிடும் வகையில், தோலின் நிறத்திற்கு தகுந்த எமொஜிக்களை மேம்படுத்தி இருந்த வாட்சாப், ஆபாசமான நடுவிரல் குறியீட்டையும் மேம்படுத்தி உள்ளது. இந்த நடு விரல் குறியீடும் தோல் நிறத்திற்கு தகுந்தார் போல் வேறுபடுகிறது.

இத்தகைய செய்கை ஆபாசமானது தான் என்பது பகிரங்கமான உண்மை. பொது இடங்களில், இத்தகைய செய்கையை காட்டினால் பல்வேறு நாடுகளில் அது தண்டனைக்குரிய குற்றமாகும். அப்படி இருக்கும் பொழுது, உலக அளவில் வெளியாகி உள்ள இந்த எமொஜிக்களுக்கு இன்னும் எதிர்ப்புகள் பெரிய அளவில் கிளம்பவில்லை என்பது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.

#TamilSchoolmychoice

whatsappஇதில் விதிவிலக்காக, பூனைக்கு முதலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மணி கட்டியுள்ளது. மைக்ரோசாப்ட் ஏற்கனவே வெளியிட்டு இருந்த இந்த நடுவிரல் எமொஜியை பயன்படுத்த அந்நாடு தடை விதித்து இருந்தது. சைபர் குற்றவியல் படி, யரேனும் இந்த குறியீட்டை மற்றவருக்கு அனுப்பியது தெரியவந்தால், 68,000 டாலர்களை அபராதமாக கட்ட வேண்டி இருக்கும். தவறான ஒன்று என்று தெரிந்து இருந்தும் வாட்சாப் ஏன் இத்தகைய எமொஜியை மேம்படுத்தியது என்பது தெரியவில்லை

அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் அதிகமாக இருந்து வந்த இந்த செய்கைகள், தற்போது ஆசிய நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. ஒருவரை அதிகபட்ச அவமானத்திற்கு உள்ளாக்கும் இந்த செய்கையால், ஆகச் சிறந்த பலன் வேறு ஒன்றும் இல்லை. பொதுவாக வாட்சாப் போன்ற சமூக ஊடகங்களில், நல்லதை விட தீயது மிக வேகமாக பரவி விடும் என்பது மறுக்க முடியாத ஒன்று. தற்போது இந்த எமொஜிக்களும் அப்படி ஒன்றாகத் தான் மாறிவிட்டது.

Long-press-emoji-to-reveal-skin-tone-variationsஇதில் இனப் பாகுபாட்டை குறிப்பிடும் வகையில் நிறத்தின் அடிப்படையில் எமொஜிக்கள் இருப்பது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இனி வரும் காலங்களில் தெரிய வரும். அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் நேற்று நடந்த செய்தியாளர் படுகொலைக்கு மிக முக்கியக் காரணமே இனவெறி தான் எனத் தெரியவந்துள்ள நிலையில், நட்பு ஊடகங்கள் அதனை மேலும் மேலும் வளர்க்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன.

தங்கள் வர்த்தக நலனிற்காக தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுத்தி வரும் இத்தகைய போக்கை, உலக நாடுகள் கண்காணிப்பதற்கும், தடுப்பதற்கு மிகச் சரியான தருணம் இது தான் என்பதை குறிப்பிட வேண்டியது இங்கு அவசியமாகிறது.