Home Slider தேசிய கீதத்தை அவமதித்த மோடி – ரஷ்யாவிலும் தொடரும் சர்ச்சை!

தேசிய கீதத்தை அவமதித்த மோடி – ரஷ்யாவிலும் தொடரும் சர்ச்சை!

663
0
SHARE
Ad

Modi-Anthem-மாஸ்கோ – இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்திய பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ள நிலையில், விமான நிலையத்தில் இந்திய தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட போது, அதற்கு மரியாதை செய்யும் விதமாக நிற்காமல், மோடி நகர்ந்து சென்றதாக சர்ச்சைகள் எழுந்தன.

மாஸ்கோ விமான நிலையத்தில் மோடி வந்திறங்கியதும், ரஷ்ய இராணுவ இசைக் குழுவினர், இந்திய தேசிய கீதத்தை ஒலித்தனர். அப்போது மோடி அதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்துள்ளார். உடனே, ரஷ்ய அதிகாரி ஒருவர் ஓடிச்சென்று, மோடியை தடுத்து நிறுத்தி தேசிய கீதம் ஒலிக்கப்படுவதை சுட்டிக்காட்டினர். அதன் பிறகே மோடி, அங்கு நின்று மரியாதை செலுத்தி உள்ளார்.

இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.