Home அவசியம் படிக்க வேண்டியவை உலக அழகிப் போட்டி 2014: கொலம்பியாவின் பவுலினா வேகா மகுடம் சூடினார்!

உலக அழகிப் போட்டி 2014: கொலம்பியாவின் பவுலினா வேகா மகுடம் சூடினார்!

986
0
SHARE
Ad

Miss Universe 1மியாமி, ஜனவரி 26 – 2014 -ம் ஆண்டிற்கான 63-வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்றது. இதில் 88 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.

இறுதிபோட்டிக்கு கொலம்பியா, இத்தாலி, இந்தியா,பிரான்ஸ், அமெரிக்கா. இந்தோனேஷியா, வெனிசுலா, ஸ்பெயின், பிலிப்பைன்ஸ், அர்ஜெண்டினா, ஜமைக்கா,உக்ரைன்,பிரேசில்,நெதர்லாந்து, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 15 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் தகுதி பெற்றனர்.

இறுதிப் போட்டியின் முடிவில், கொலம்பியா நாட்டு அழகி பவுலினா வேகா உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு முன்னாள் 2013-ம் ஆண்டின் உலக அழகி  கேபரிலா இஸ்லர்  கிரீடம் சூட்டினார்.

#TamilSchoolmychoice

வணிக நிர்வாக படிப்பு படித்து வரும் பவுலினா வேகாவிற்கு 22 வயதாகிறது.

Miss Universe(2014-ம் ஆண்டின் உலக அழகி பவுலினா வேகா)

இரண்டாவது இடத்தை மிஸ்அமெரிக்கா நியா சான்செஸ்சும், 3-வது இடத்தை  உக்ரைன் அழகி டயனா ஹர்குஷா பெற்றனர். 4-வது இடத்தை நெதர்லாந்து அழகி யாஸ்மின் வெர்கிஜின் பெற்றார். 5-வது இடத்தை ஜமைக்கா அழகி கசி பென்னால் பெற்றார்.

இயற்கை அழகியாக நைஜிரிய அழகி  குயின் செலிஸ்டினும், புகைப்படங்களுக்கு ஏற்ற அழகியாக  போர்ட்டோ ரிகோ அழகி கேப்ரிலா பெர்ரி ஓஸ்சும், தேசிய ஆடை அழகியாக இந்தோனேசியாவின் எல்விரா டிவினமிரா ஆகியோரும் தேர்ந்து எடுக்கபட்டனர்.

படங்கள்: EPA