Home Photo News மிஸ் வோர்ல்ட் உலக அழகிப் போட்டி – மிஸ் ஆசியா வென்ற சுமன் ராவ் –...

மிஸ் வோர்ல்ட் உலக அழகிப் போட்டி – மிஸ் ஆசியா வென்ற சுமன் ராவ் – படக் காட்சிகள்

905
0
SHARE
Ad

இலண்டன் – ஒரு காலத்தில் இந்திய அழகிகள் சுஷ்மிதா சென்னும், ஐஸ்வர்யா ராயும், பிரியங்கா சோப்ராவும் வரிசையாக உலக அழகிப் போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர். திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ் பெற்றனர்.

ஆனால் அண்மைய ஆண்டுகளில் இந்த வெற்றிப் பயணம் தொடரவில்லை. தொடர்ந்து இந்திய அழகிகள் உலகப் போட்டிகளில் பங்கு பெற்றாலும் யாரும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறவில்லை. அதை முறியடித்துள்ளார் 2019 மிஸ் வோர்ல்ட் உலக அழகிப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததோடு, மிஸ் ஆசியா பட்டத்தையும் வென்றிருக்கும் சுமன் ராவ்.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் உதயபூர் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட சுமன் சிறுவயதிலேயே நகை வணிகரானத் தந்தையைப் பின்பற்றி மும்பை சென்றார். அங்கு பள்ளிப் படிப்பை முடித்த பின் கணக்கியல் துறையில் பயில மும்பை பல்கலைக் கழகம் சேர்ந்தார்.

#TamilSchoolmychoice

ஒரு விளம்பர (மாடல்) அழகியான சுமன் கதக் நடனத்தில் பயிற்சி பெற்றவராவார். 2019 மிஸ் ராஜஸ்தான் அழகியாக வெற்றி பெற்றவர் பின்னர் மிஸ் இந்தியா அழகியாகவும் தேர்வு பெற்றார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 82,000 பின்தொடர்பாளர்களைக் கொண்டிருக்கும் சுமன் ராவுக்கு இனி இரசிகர் பட்டாளம் பன்மடங்கு உயரும் என்பதில் ஐயமில்லை.

அவரது ‘இன்ஸ்டாகிராம்’ புகைப்படங்கள் சிலவற்றையும், உலக அழகிப் போட்டி படக்காட்சிகளையும் இங்கே காணலாம்:

கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 14) இலண்டனில் நடைபெற்ற மிஸ் வோர்ல்ட் பட்டத்திற்கான 2019 உலக அழகிப் போட்டியில், ஜமைக்கா நாட்டு அழகி டோனி-ஆன் சிங் வெற்றியாளராக வாகை சூடினார். பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது இடத்தை ஒப்பெலி மெசினோ பிடிக்க, மூன்றாமிடத்தை இந்தியாவின் சுமன் ராவ் கைப்பற்றினார்.

உலக அழகிப் போட்டியில் கறுப்பினப் பெண் ஒருவர் வெற்றி பெற்றிருக்கும் வேளையில் மூன்றாவது இடத்தை இந்தியப் பெண்ணான சுமன் ராவ் கைப்பற்றியுள்ளார்.